மெக்சிகோவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதால், மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் .
மெக்சிகோவில் இருக்கும் குரெரோவின் அகாபுல்கோ என்ற பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. நில அதிர்வு நிபுணர்களும் பொதுமக்களும், மெக்சிகோ நகர் வரைக்கும், கடும் அதிர்வுகள் உண்டானதாக கூறியுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் மின்வெட்டு மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், மக்கள் அனைவரும் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும், இதனால் உண்டான சேதங்கள் தொடர்பில் பிற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் மெக்ஸிகோவிற்கு தெற்கில் சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்ததாக, தெரிவித்திருக்கிறது.