அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற டேனில் மெட்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஜாண்ட்ஸ்குல்ப்பை எதிர்கொண்டார்.இதில் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மெட்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதன் மூலமாக அமெரிக்க ஓபன் டென்னிசில் தொடர்ந்து 3-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
இதையடுத்து நடந்த மகளிருக்கான காலிறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரசை சேர்ந்த ஷபலென்கா, செக் குடியரசை சேர்ந்த பார்பரா கிரஜ்கோவாஎதிர்த்து மோதினார்.இதில் 6-1 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஷபலென்கா முதல் முறையாக அமெரிக்க ஓபன் டென்னிசில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் 6-3, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த எலினா சுவிட்டோலினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.