Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பணம் கேட்ட தரல” மகனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுகுடிக்க பணம் கொடுக்காததால் மகன் தாயை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முப்புலிவெட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கனகராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தனகுமார் என்ற மகன் இருக்கின்றான். இவர் கூலி வேலை பார்த்து வருகின்றார். இதில் சந்தன குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி கனகராணி  தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சந்தனகுமார், மது குடிப்பதற்கு கனகராணியிடம் பணம் கேட்டுள்ளார்.

ஆனால் கனகராணி, சந்தகுமாருக்கு பணம் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சந்தனகுமார் தாய் என்று நினைக்காமல் கனகராணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கனகராணி மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கனகராணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து சந்தனகுமாரை கைது செய்தனர்.

Categories

Tech |