பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு சங்க ஆலோசகர் டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கோரிக்கைகளை பி.ராமர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அப்போது போராட்டத்தில் முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்கவேண்டும் மற்றும் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு முதலான ஓய்வுதிய மாற்றத்தைக் கொடுக்க வேண்டும். அதன்பின் மருத்துவ படியை மாதந்தோறும் கொடுக்கவேண்டும் என்று ஓய்வூதியர்கள் வலியுறுத்தினர். மேலும் கொரோனா மருத்துவ செலவிற்கு 1 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் பொருளாளரான ராமர் மற்றும் ஓய்வூதியர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.