இன்று சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 150 பள்ளிகளில் 100 கோடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஆதிதிராவிட குடியிருப்புகளில் ரூபாய் 25 கோடியில் 75 சமுதாய நலக் கூடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு கட்டமைப்பு 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Categories