Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்களுக்கு நடந்த கொடுமை…. மர்ம நபர்களின் அட்டூழியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்களிடமிருந்து தங்க சங்கிலியை பறித்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கவிதா என்பவர் போலீசாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் கவிதா தன்னுடன் பணிபுரியும் போலீஸ்காரரான விஜயகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் அரசு ஊழியர் மற்றும் சாலையில் நடந்து சென்ற பெண் போன்றோரிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் கிருபா, சிவா மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 16 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |