Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. ராணுவ வீரரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டிகணபள்ளி பகுதியில் ராணுவ வீரரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |