பணத்தை திருட முயன்ற மர்ம நபருக்கு மூதாட்டி சரமாரியாக அடி கொடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் மூதாட்டியான கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கீரை மற்றும் வாழைப்பழங்களை விற்று வந்துள்ளார். இந்நிலையில் கமலம் வசூலான பணத்தை ஒரு சுருக்குப் பையில் வைத்து கொண்டு அப்பகுதியில் இருக்கும் கடை முன்பு படுத்து தூங்கியுள்ளார்.
இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டே வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் சுருக்கு பையில் இருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். அப்போது விழித்து கொண்ட மூதாட்டி அந்த மர்ம நபரை துடைப்பத்தால் சரமாரியாக அடித்த காட்சிகள் ஒரு கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.