நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அத்தாயி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் தீவிர பக்தரான அத்தாயி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகளும் பலமுறை ஊருக்கு அழைத்தும் அத்தாயி ஊருக்கு வர மறுத்துள்ளார்.
மேலும் ராமசாமி தன்னுடைய மனைவியை மீட்டு தருமாறு கலெக்டர் அலுவலகம் மற்றும் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யம்பாளையத்தில் அத்தாயி பெயரில் இருக்கும் சொந்த வீடு ஜப்தி செய்வதற்க்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது ஊருக்கு வர முயன்ற அவரை ஆசிரமத்தில் தன்னை விட மறுக்கிறார்கள் என அத்தாயி செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து அவர் தனது மகன் வழி பேத்தியுடன் அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் தினமும் பேசிய நிலையில் அத்தாயி ஊருக்கு வந்து பேத்தியை பார்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். எனவே அத்தாயி தன்னுடன் 2 பெண் சீடர்களை அழைத்துக்கொண்டு காரில் ராசிபுரம் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் அத்தாயியை மீட்டு அவருடன் வந்த 2 பெண் சீடர்களை அடித்து விரட்டியது தெரியவந்துள்ளது. தற்போது அத்தாயி அவரது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார். மேலும் அத்தாயி எப்படி ஆசிரமத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.