பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தகராறு காரணமாக வைரமுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைரமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.