Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டை மீறியதால் நேர்ந்த விபரீதம்.. இளைஞருக்கு 5 வருடங்கள் ஆயுள் தண்டனை..!!

வியட்நாமில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி 8 பேருக்கு தொற்றை பரப்பிய இளைஞருக்கு ஐந்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக வியட்நாம் இருக்கிறது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள க மைவ் நகரத்தில் வசிக்கும் லி வென் டிரி என்ற 28 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பதால் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆனால், அவர் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்காமல், ஹோ ஷி மின்ஹீ என்ற நகருக்கு சென்றிருக்கிறார். எனவே, இவரால் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார். இதனால் இந்த இளைஞர் மீது கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. விசாரணையில் அவர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டு, 5 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |