Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முக்கிய அறிவிப்பு…. டி20 உலகக்கோப்பை… இந்திய அணியில் யார் யார்?

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி இன்று இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. ஆனால் இந்திய அணி தரப்பில் வீரர்கள் இன்னும் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.. இதனால் ரசிகர்கள் எப்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்..

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை இன்று இரவு 9 மணிக்கு பிசிசிஐ அறிவிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.. இந்திய அணியில் யார் யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..

Categories

Tech |