Categories
உலக செய்திகள்

“அதிபர் ஜோபைடன் மனைவி பணிக்கு திரும்பினார்!”.. இதற்கு முன் அமெரிக்க ஜனாதிபதிகளின் மனைவிகள் செய்யாத செயல்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் மனைவியான ஜில் பைடன், கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் மனைவியான ஜில் பைடன், கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து வடக்கு வெர்ஜீனியா கம்யூனிட்டி கல்லூரியில் பேராசிரியையாக இருந்து வருகிறார். கொரோனா தொற்றால் நாட்டில் பள்ளி, கல்லூரிகளின் பாடங்கள் இணையதளத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது.

எனவே, ஜில்பைடனும் இணையதளத்தின் மூலமாகத் தான் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார். தற்போது, கொரோனா தொற்று குறைந்திருப்பதால் நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஜில் பைடன், கல்லூரிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார்.

அதாவது, இதற்கு முன்பு இருந்த, அமெரிக்க ஜனாதிபதிகளின் மனைவிகள் எவரும் வேறு பணிகளுக்கு சென்றது கிடையாது. அமெரிக்க ஜனாதிபதியாக புஷ்ஷின் பதவியேற்றவுடன் அவரின் மனைவி லாரா, தொடக்கப் பள்ளியில் ஆசிரியை பணியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |