Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதை தூர்வார வேண்டும்…. குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாக்கடை கால்வாய் தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகரில் உள்ள குப்பைகளை பணியாளர்கள் அகற்றிவருகின்றனர். இதேபோன்று மாநகரில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஆனால் திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம், ராமநாதபுரம் 2-வது வீதி உள்ளிட்ட இடங்களில் சாக்கடை கால்வாய் தூர்வாராமல் இருப்பதால் கழிவுநீர் சாலையில் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சாக்கடை கால்வாய் அருகில் குடிநீர் குழாய் இருக்கின்றது. இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |