Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிட்டு” 17 வயது சிறுமி கர்ப்பம்…. நீதிமன்றம் உத்தரவு….!!

சிறுமிய பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடுமாம்பள்ளி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். பிறகு 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்குப் பின் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுமியிடம் பெற்றோர் கேட்ட போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். அதனால் தங்கராஜிடம் சென்று மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளனர். அதற்கு அவர் எனக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதாக கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் தங்கராஜை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |