பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை லாஸ்லியா. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் தற்போது பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் லாஸ்லியா தற்போது புடவையில் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை கண்ட அவரது ரசிகர்கள் தங்களது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.