தாடி பாலாஜி விபத்து எதிலும் சிக்கவில்லை என்று கூறிய ஈரோடு மகேஷ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் BMW கார் ஒன்றை வாங்கி அதனுடன் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனை கண்ட பலரும் தாடி பாலாஜி அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினர். இதற்கிடையில் தாடி பாலாஜி விபத்து ஒன்றில் சிக்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதனை அறிந்த அவரது நண்பரும், விஜய் டிவி பிரபலமுமான ஈரோடு மகேஷ் பாலாஜி விபத்து எதிலும் சிக்கவில்லை என்று கூறி வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.