Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவர்களுக்கு கொரோனா உறுதி… தடுப்பூசி கட்டாயம்… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு…!!

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கையான கொரோனா பரிசோதனை கல்லுரி மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் 2 மாணவர்களுக்கும் 1 கல்லூரி உதவியாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் 3 பேரும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனையடுத்து சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின்படி கல்லூரி முழுவதிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளனர்.

இதனைதொடர்ந்து கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தீவிர கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அரசின் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்காத கல்வி நிறுவனங்கள் மீது பொது சுகாதார பராமரிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |