Categories
உலக செய்திகள்

தலீபான்களின் புதிய ஆட்சி…. அங்கீகரிப்பதில் பிரபல நாட்டின் முடிவு…. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்….!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலீபான்களின் புதிய ஆட்சியை அவ்வளவு எளிதாக அங்கீகரிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமைப்பது இழுபறியாக இருந்த நிலையில் தற்போது ஒருவழியாக ஆட்சியை அமைத்துள்ளனர். அந்த ஆட்சியில் தலைவாராக முல்லா முகமது ஹசன் அகண்ட்டும் துணைத்தலைவராக முல்லா பரதரும் வெளியுறவுத் துறை துணை மந்திரியாக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாவும் உள்துறை மந்திரியாக சிராஜுதீன் ஹக்கானியும் மற்றும் பாதுகாப்பு மந்திரியாக முல்லா யாக்கூப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தலீபான் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தலீபான்களின் புதிய ஆட்சியை அமெரிக்கா வெள்ளை மாளிகை அவ்வளவு எளிதாக அங்கீகரிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. இதுக்குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறியதாவது “தலீபான்களின் புதிய ஆட்சியை அவ்வளவு எளிதாக அங்கீகரிக்க முடியாது. தலீபான்களின் நடவடிக்கைகளை பொறுத்துதான் முடிவெடுக்க முடியும். உலகமே அவர்களின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் அமெரிக்கா அவர்களை தீவிரமாக கண்காணிக்கும்” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |