Categories
உலக செய்திகள்

“எங்கள் நாட்டின் விவகாரங்களில் தலையிடாதீர்கள்!”.. ஆப்கானிஸ்தானில் போராடும் பெண்கள்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பாகிஸ்தானை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு நேற்று இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம்  பெண்களால் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஊடகத்தை சேர்ந்த சிலர் வீடியோ எடுப்பதை தலிபான்கள் தடுத்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானின் உள்நாட்டு புலனாய்வுத் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூல் நகருக்கு வந்ததையடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண், பாகிஸ்தான் நாடு எதற்காக? எங்களது உள்நாட்டு விவகாரங்களில் வெளிப்படையாக தலையிடுகிறார்கள். மேலும் பாகிஸ்தான் புலனாய்வுத் துறை தலைவர் எதற்காக இங்கு ஆறு நாட்களாக தங்கியிருக்கிறார்? என்று கேட்கிறார். மேலும் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, தங்களது உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

எனினும், தலிபான்கள் எங்களது ஆட்சியில் பெண்கள் பணியாற்றலாம். ஆனால் முக்கிய பொறுப்புக்களில் பதவி வகிக்க முடியாது என்று கூறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |