Categories
சினிமா தமிழ் சினிமா

‘அண்ணாத்த’ படத்தை பார்த்துவிட்டு ரஜினி கொடுத்த விமர்சனம்… செம குஷியில் சிவா…!!!

‘அண்ணாத்த’ படத்தை பார்த்த ரஜினி இயக்குனர் சிவாவை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Siruthai Siva meets Rajinikanth regarding Annaatthe | Tamil Movie News -  Times of India

இந்நிலையில் இயக்குனர் சிவா அண்ணாத்த படத்தை நடிகர் ரஜினிக்கு போட்டுக் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த  படத்தை பார்த்த ரஜினி இயக்குனர் சிவாவிடம் பாராட்டு தெரிவித்ததாகவும், இந்த படம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை வெகுவாக கவரும் என்றும் கூறியுள்ளாராம். ரஜினியின் இந்த விமர்சனத்தால் சிவா மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது .

Categories

Tech |