Categories
உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய வாலிபர்…. 7 பேர் படுகாயம்…. சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி….!!

சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கை வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 37 வயதான Ahamed Aathill Mohamed Samsudeen  என்ற இலங்கையர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின் Samsudeen போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த ஏழு பேரில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் படுகாயமடைந்த ஏழு பேரில் மூன்று பேர் பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மற்ற நால்வரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனை இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரியான  Lauano Sue Schwagler  தெரிவித்துள்ளார். குறிப்பாக படுகாயமடைந்த ஏழு பேரில் நான்கு பெண்களும் 3 ஆண்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |