நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள டக் ஜெகதீஷ் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தற்போது இவர் இயக்குனர் சிவா நிர்வணா இயக்கியுள்ள டக் ஜெகதீஷ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, நாசர், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். டக் ஜெகதீஷ் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.
Jagadi & Gumma 🤍😊
3 days to go #TuckJagadishOnPrime ,Sept 10th@riturv @aishu_dil @IamJagguBhai @IamThiruveeR @DanielBalaje @Shine_Screens @ShivaNirvana @MusicThaman @GopiSundarOffl @sahisuresh @praveenpudi @sahugarapati7 @harish_peddi
@adityamusic pic.twitter.com/VUk0bSrelq— Hi Nani (@NameisNani) September 7, 2021
ஆனால் தற்போதுள்ள சூழல் காரணமாக இந்த படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டக் ஜெகதீஷ் படத்தின் அசத்தலான புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.