Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் உள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக பார்த்திபனும் அதே பகுதியில் வசிக்கும் 23 வயது பெண்ணும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில்  பார்த்திபனிடம் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஆனால் பார்த்திபன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அந்த பெண் அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பார்த்திபனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |