மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறு களத்தூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டிற்கு முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டின் மீது மின்கம்பி அறுந்து விழுந்து விட்டது.
இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக இறந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி இறந்த மாட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.