Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாருமே எதிர்பார்க்காத “ட்விஸ்ட்” …. இந்திய அணியில் மீண்டும் “தல தோனி” …. ரசிகர்கள் கொண்டாட்டம் ….!!!

டி 20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது .

டி 20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உளளது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை  போட்டிக்கான இந்திய அணியை  பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது.

இதில் முன்னணி வீரர்களான ஷிகர் தவான் மற்றும் யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் இடம்பெறவில்லை .இந்நிலையில் இந்திய அணியின் வழிகாட்டியாக முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு  தோனியின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணி :விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன் , ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.
 மாற்று வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .

Categories

Tech |