சட்டப்பேரவையில் நேற்று மானிய கோரிக்கையின் போது, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிஏஏ தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் இந்த தீர்மானம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக பிரபலம் காயத்திரி ரகுராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழகத்தில் வாழும் குடும்பங்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள். அதன் பிறகு சிஏஏ வை பற்றி பேசலாம். திமுக திசை திருப்பும் அரசியல் செய்வதன் மூலமாக தப்பித்து வருகிறார்கள். முதலில் மக்களை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.