Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு… மனைவி எடுத்த விபரீத முடிவு… போலீசார் விசாரணை…!!

கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அன்டிபட்டியை அடுத்துள்ள வருசநாடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பாண்டியம்மாள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து நேற்று முன்தினம் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருசநாடு காவல்துறையினர் பாண்டியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |