மேம்பாலத்தில் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசியில் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இதன் அருகில் ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தில் ரயில்வே துறை சார்பாக 4 தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு சில ஆண்டுகளான நிலையில் இதனை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி தற்போது பழமையான இந்த தடுப்பு சுவர்கள் இடிக்கப்பட்ட பின் புதிய கட்டுமான பணிகள் நடைபெற இருக்கின்றது. எனவே கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் விளம்பர பலகையும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த பணிகள் முடியும் வரை கவனமாக செல்ல வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.