Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மசாஜ் சென்டர் பெயரில்…. தம்பதியினர் செய்த செயல்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

சட்டவிரோதமாக விபச்சாரம் நடத்திய தம்பதியினரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோட்டில் ஆயுர்வேதம் மசாஜ் என்ற பெயரில் சென்டர் நடத்தப்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக மாவட்ட வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் கடந்த மாதம் 23-ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதுதொடர்பாக மசாஜ் செண்டர் உரிமையாளரான கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ராஜேஷ், அவரது மனைவி அனு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இதனையடுத்து திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அரவிந்த் பரிந்துரையின்படி, ராஜேஷ், அனு இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார். இதற்குரிய உத்தரவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், கோவை மத்திய சிறையில் உள்ள தம்பதியினரிடம் வழங்கினார். அதன்பின் ராஜேஷ், அனு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |