பணப்பரிமாற்றத்திற்காக எல் சல்வடோர் அரசு பிட்காயினை தேசியளவில் அங்கீகாரம் செய்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள எல் சல்வடோர் நாட்டில் தேசிய அளவிலான பண பரிமாற்றத்திற்கு பிட்காயினை அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது. இதுவரை எல் சல்வடோர் நாட்டில் அமெரிக்கா டாலர் பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்துப்பட்டது. இந்த நிலையில் இனிமேல் பிட்காயினும் பணப்புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிட்காயின் உறுதி தன்மையற்று இருப்பதாலும் முறையான பாதுகாப்பு இல்லாததாலும் பல நாடுகள் இதனை பணப்பரிமாற்றத்திற்கு கொண்டு வர தயங்கி வந்தனர்.
இந்த நிலையில் எல் சல்வடோர் அரசு பிட்காயினை முறையாக அங்கீகாரப்படுத்தியுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் சில தொழிநுட்ப சிக்கல்கள் இருந்துள்ளன. ஆனால் தற்போது அனைத்து சிக்கல்களும் முழுமையாக சரிசெய்யப்பட்டதால் பிட்காயினை பணப்பரிமாற்றத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.