புதிய ஆப்கன் அரசு அந்நாட்டு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை தடை செய்தால் ஆடவர் அணிகளுக்கான டெஸ்ட் போட்டியை நாங்கள் நடத்த மாட்டோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டு தலைவராக முல்லா ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.. இந்த தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.. பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கும் என்று கூறப்படுகிறது.. இதனிடையே தலிபான்கள் ஆடவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை தடை செய்வார்களா என்று கேள்வி குறி எழுந்த நிலையில் அதற்கு அவர்கள் பச்சைக் கொடி காட்டி விட்டனர்..
அதன்படி, ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் ஆஸ்திரேலியா-ஆப்கன் ஆடவர் அணிகளுக்கான 2 டெஸ்ட் போட்டி வருகின்ற நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.. இந்நிலையில் புதிய ஆப்கன் அரசு அந்நாட்டு பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை தடை செய்யுமானால், ஆஸ்திரேலியா-ஆப்கன் ஆடவர் அணிகளுக்கான டெஸ்ட் போட்டியை நாங்கள் நடத்த மாட்டோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது..
An update on the proposed Test match against Afghanistan ⬇️ pic.twitter.com/p2q5LOJMlw
— Cricket Australia (@CricketAus) September 9, 2021