நடிகை குஷ்பூ 15 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. சொல்லப்போனால் எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு இவருக்கு கோவில் கட்டப்பட்டது. வெள்ளித் திரையில் கலக்கி வந்த இவர் சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்துவந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் அரசியலிலும் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ 15 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் தன் உடல் எடையை எப்படி குறைத்தார் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
I lost 15kgs towards my goal and got a badge with Fitbit! https://t.co/VIGzankO8b #Fitstats #healthylifestyle #nothingisimpossible #determination #hardwork.
— KhushbuSundar (@khushsundar) September 7, 2021