வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மகன்களுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டனர். இதனையடுத்து ராமசாமி தனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் ராமசாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 200 கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.