சிறையில் இருந்து கைதிகள் சுரங்க பாதை அமைத்து தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டிலுள்ள கில்போவா எனும் இடத்தில் உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆறு கைதிகள் சுரங்கம் அமைத்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும் கைதிகள் சுரங்கப் பாதையின் வெளிச்சுவரை தாண்டி வெளியேறியுள்ளனர். குறிப்பாக இவர்கள் பாலஸ்தீனியர்கள் ஆவர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளானது வலைதளங்களில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, சிறைக்கைதிகளை கண்காணிக்கும் அதிகாரிகள் வேலை நேரத்தில் உறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.