Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி சிறப்பு முகாம்” வருகின்ற 12-ம் தேதி…. கலெக்டரின் தகவல்….!!

உடுமலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற 12-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் சுற்றுலாத்துறையினர் சார்பாக நடைபெற இருக்கும் சிறப்பு தடுப்பூசி முகாமில் வருகின்ற 12-ஆம் தேதி முதல் தேஜஸ் மஹாலில் வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

இதில் சுற்றுலா தொழில்முனைவோர்கள், தங்கும் விடுதிகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |