நடிகை மாளவிகா மோகனன் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத்தொடர்ந்து அவர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ரஜினி, விஜயை தொடர்ந்து அவர் தற்போது தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.