2 அடிக்கு மேல் விநாயகர் சிலையை விற்பனைக்கு வைத்திருந்த 5 குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ரோந்து பணியானது போலீஸ் சூப்பிரண்டான சின்னராஜ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து 2 அடிக்குமேல் விநாயகர் சிலையை விற்பனைக்கு வைத்திருந்த 5 குடோன்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்த ஆய்வின்போது காவல்துறையினருடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். அதன் பிறகு குடோன்களுக்கு சீல் வைத்ததோடு அதிகாரிகள் அபராதமும் விதித்துள்ளனர்.