Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அவர்களை இடமாற்றம் செய்யனும்…. கட்சியினரின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாப்பாரப்பட்டி பேருராட்சி செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தவுலத்பாஷா தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் கவுன்சிலர் ஹாஜிராபீ மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் தவுலத்பாஷா, முன்னாள் கவுன்சிலர் ஹாஜிராபீ உள்ளிட்ட 120 பேர் மீது பாப்பாரப்பட்டி காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |