Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்னால் தாங்க முடியல” என்ஜீனியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் என்ஜீனியர் பட்டதாரியாக இருந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் கோபத்தில் சேலத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் சேலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியை பிரிந்த சோகத்தில் சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |