Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீஸுக்கு ரெடியாகும் கவினின் ‘லிப்ட்’… வெளியான செம அப்டேட்…!!!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கவின். மேலும் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார் .

எக்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் லிப்ட் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் வருகிற அக்டோபர் மாதம் இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |