சீரியல் பிரபலம் அபி நவ்யா மற்றும் தீபக்கிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
பிரபலங்கள் பலர் சீரியல்களில் நடித்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் திருமணம், என்றென்றும் புன்னகை, சித்திரம் பேசுதடி ஆகிய சீரியல்களில் ஒன்றாக இணைந்து நடித்தவர்கள் அபி நவ்யா மற்றும் தீபக். இந்நிலையில் இவர்களுக்கு தற்போது உறவினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.