Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் தரோம்… பிக்பாஸ் வாய்ப்பை உதறித் தள்ளிய தீபா… காரணம் இதுதான்…!!!

ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளம் தருவதாக கூறியும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தீபா செல்லாததற்கான காரணம் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. அண்மையில் இதற்கான புரோமோவும் வெளியாகின. இதனால் ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் 5ஐ ஆர்வமுடன் உள்ளனர்.

இதற்கிடையில் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறார்கள் என்ற லிஸ்டும் அவ்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான தீபாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை பங்கேற்பதற்காக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் தருவதாக கூறி அழைத்தனர். ஆனால் நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஏனென்றால் எனக்கு பணத்தை விட சுயமரியாதையே முக்கியம் என்று நினைத்து நான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அன்புக்கு தான் நான் அடிமை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |