வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.
Categories