தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் கொண்டாடுவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பாஜக சார்பாக ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீட்டு வாசலில் மூன்று நாட்களுக்கு வைத்து வழிபடுகிறோம் என்றும் ,அது எங்களுடைய தனிப்பட்ட உரிமை அதில் அரசு தலையிட முடியாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் புரட்சி செய்வதாக நினைத்து பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் தப்பு தப்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து எழுதி முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், நம் “விநாகயர்” “பெருமனால்” மட்டுமே சங்கத் தமிழையும், தமிழ் மக்களையும் காக்க முடியும். முதல்வரே நீங்கள் மக்களின் உணர்வை காயப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள் என எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளார்.
.@mkstalin Happy Vinayagar Chathurthi pic.twitter.com/POqtaHcwxN
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) September 8, 2021
அதை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் காயத்ரி ரகுராமை சரமாரியாக கலாய்த்து வருகின்றனர். இதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராம், இதுவரை விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தியின் எழுத்து பிழையை தெரிந்து கொள்வாரா? என்று பதிவிட்டுள்ளார்.