அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இவற்றில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, தாவரவியல், வேதியியல், இயற்பியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், புவியியல், புவியமைப்பியல், உணவு மற்றும் ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். அப்போது ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் தனித்தனியாக கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. அதன்பின் மாணவர்களின் கல்வி சான்றிதழை பேராசிரியர்கள் சரிபார்த்தபின் கலந்தாய்வு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.