டி20 உலகக் கோப்பைக்கான இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணி வீரர்களை தேர்வு செய்து அறிவித்து விட்டது.. அதேபோல இந்தியாவும் நேற்று 15 பேர் கொண்ட அணி வீரர்களை அதிகார்வப்பூர்வமாக அறிவித்து விட்டது..
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.. அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை..
தைமல் மில்ஸ் 2017 பிறகு அணியில் இடம்பெற்றுள்ளார். டாம் கரன், லியாம் டாவ்சன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் மாற்று வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் :
இயான் மோர்கன், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், சாம் கர்ரன் ஜாஸ் பட்லர், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலன், தைமல் மில்ஸ், ஆடில் ரஷீத், ஜேசன் ராய், டேவிட் வில்லே, கிரிஸ் வோக்ஸ், மார்க் உட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்..
Happy with our @T20WorldCup squad? 🏏 🌎 🏆
More 📝 https://t.co/hzCrlFFSzj pic.twitter.com/3L7ee8WJTq
— England Cricket (@englandcricket) September 9, 2021