Categories
உலக செய்திகள்

ஆப்கானில் பிரதமர் பெயர் அறிவிப்பு…. தலீபான்களுக்கு எதிராக செயல்பட்ட…. பத்திரிக்கையாளர்கள் 5 பேர் கைது….!!

தலீபான்கள் இதற்கு முந்தைய ஆட்சியில் அவர்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனையடுத்து உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து உள்ளனர்.

அதன்பின் அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தமது சொந்த நாட்டு மக்களை மீட்பு விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றியும் வந்துள்ளனர். இதற்கிடையில் தலீபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பயந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் பலர் பக்கத்து நாடுகளுக்கு தப்பித்து செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மட்டுமில்லாமல் நாட்டின் அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் என அனைவருமே வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதையெல்லாம் தலீபான்கள் கண்டுகொள்ளாமல் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பணிகளில் மட்டுமே மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தலீபான்கள் புதிய ஆட்சிக்கான பிரதமரையும் மந்திரி சபையையும் அறிவித்துள்ளது. இதற்கு முன் இருந்த ஆட்சியில் தலீபான்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கையாளர்களை கைது செய்தும் கொலை செய்தும் அவர்கள் வருகின்றனர். மேலும் தலீபான்கள் புதிய அரசாங்கத்தின் பிரதமரை அறிவித்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |