Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களை திருப்பி அனுப்ப திட்டம்.. எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சி.. வெளியான தகவல்..!!

பிரான்ஸிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் வரும் புலம்பெயர்ந்த மக்களை, திருப்பி அனுப்ப பிரிட்டன் அனுமதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில், புலம்பெயர்ந்த மக்களை அழைத்து வரும் படகுகளை அப்படியே கடலில் இருந்து திருப்பி அனுப்புவது எப்படி? என்பது தொடர்பில் எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. எனினும், அது பாதுகாப்பானதாக இருந்தால் மட்டும் தான் இந்த புதிய திட்டத்தை கையாள வேண்டும் என்று பிரிட்டனின் ஒரு அரசு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த அதிகாரி தெரிவித்துள்ளதாவது, பிரிட்டனின் செயல் தலைமை அட்டர்னி ஜெனரலான மைக்கேல் எல்லிஸ், புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த எல்லை அதிகாரிகளுக்கு உரிய சட்டங்களை உருவாக்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |