சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சுமார் 100 பிராங்குகள் அதிகமாக சம்பளத்தை பெறுவதற்கு உரிமையுண்டு என்று அந்நாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்க குழுமம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் சுமார் 100 பிராங்குகள் அதிகமாக சம்பளத்தை பெறுவதற்கு உரிமையுண்டு என்று அம்பரல்லா குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் சுவிட்சர்லாந்திலுள்ள தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.
அதாவது அந்நாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக 4,000 பிராங்குகள் வழங்க வேண்டும் என்பதாகும். இதனையடுத்து சுவிட்சர்லாந்திலுள்ள 20 தொழிற் சங்கங்களில் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள் சம்பள உயர்வை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.